பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2014

சிற்றுந்தில் இலை : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
சிற்றுந்தில் இலை ஓவியம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.  ஓவியம் மக்களிடையே குழப்பத்தை
ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் சொன்னதை கோர்ட் ஏற்றது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மக்களவை தேர்தல் நடவடிக்கையாக சிற்றுந்தில் உள்ள இலை ஓவியத்தை மறைக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தார்.   தேர்தல் ஆணையமும் நீக்கிவிட உத்தரவிட்டது.  ஆனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.