பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

சுகவீனமா? பலவீனமா? நாமக்கல் தேமுதிக வேட்பாளர் போட்டியிட மறுப்பு

நாமக்கல் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேமுதிக வேட்பாளர் மகேஸ்வரன், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், தன்னால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட
முடியாது என்று கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாமக்கல் உட்பட 5 தொகுதிகளுக்கான வேட்பாளரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து, அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று நாமக்கல் தொகுதிக்குச் சென்று, அங்கு போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள மகேஸ்வரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், மகேஸ்வரன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தவாறு, கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உடல்நிலை காரணமாக தான் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தான் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளதால் தன்னால் போட்டியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
உடல் நிலைக் காரணமாக அவர் போட்டியிட மறுப்பதாகக் கூறியுள்ள போதிலும், தோல்வி பயமே அவர் தேர்தலில் இருந்து விலக முக்கியக் காரணமாக இருக்கும் என்கிறது தகவல் அறிந்த பட்சிகள்.