பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2014


கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது: விஜயகாந்த்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றிருந்தார். சிங்கப்பூர் சென்றிருந்த அவர் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


திரைப்படம் தயாரிப்பது குறித்து பேசுவதற்காக சிங்கப்பூர் சென்று வந்தேன். மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி 7 பேரை விடுவிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.