பக்கங்கள்

பக்கங்கள்

22 மார்., 2014



தோல்வி பயத்தினால் வீராப்பு பேசும் சிதம்பரம், இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை: ஜெயலலிதா பேச்சு
சிவகங்கை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பேசிய ஜெயலலிதா, 
மத்தியில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டை சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பல வங்கி கிளைகளை திறந்து வைத்துள்ளார். வங்கிகளை திறந்து வைப்பதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி அடைந்துவிடாது. தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே அல்ல என்று காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது.

அஇஅதிமுகவை பொறுத்தவரை ப.சிதம்பரத்தின் வெற்றி என்பது மோசடியான ஒன்று. ப.சிதம்பரத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வருகிறதோ இல்லையோ உங்கள் தீர்ப்பு வரும் காலம் வந்துவிட்டது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. தோல்வி பயத்தினால் வீராப்பு பேசும் சிதம்பரம், இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் கார்த்திக் சிதம்பரத்தை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். வார்த்தை ஜாலத்தால் மக்களை ஏமாற்றும் ப.சிதம்பரம், காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். 
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க செய்த சிதம்பரம், அஇஅதிமுகவை பி டீம் என்று குறிப்பிட்டுள்ளார். சிதம்பரம் சொல்வதைப்போல் அஇஅதிமுக யாருக்கும் பி டீம் அல்ல. இது தனி டீம். 
தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக மக்கள், தமிழக அரசுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் வருவாயை குறைத்து, கூடுதல் நிதிச்சுமையை சுமத்துகிறது என்றார்.