பக்கங்கள்

பக்கங்கள்

4 ஏப்., 2014

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அமெரிக்கா 1.7 மில்லியன் நிதியுதவி

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவுமென ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக
அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இது குறித்து மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு உதவும் பொருட்டு அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கென அமெரிக்க அரசாங்கம் இந்த வருடம் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க எதிர்பார்த்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் பாடசாலையை விட்டு விலக நேரிடும் சிறுவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறும் சிறுவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு வலுவூட்டுதல் மற்றும் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் ஆதரவு உள்ளிட்ட பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறையைத் தடுப்பதனை நோக்கமாகக் கொண்ட வேலைத்திட்டங்களுக்கும் இத்தகைய நிதியுதவி பயன்படவுள்ளது.