பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2014

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான 101 வழக்குகளை வாபஸ் பெற முடியாது: தமிழக அரசு
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான 101 வழக்குகளை திரும்ப பெற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறக் கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவிற்கு இன்று பதில் அளித்துள்ள தமிழக அரசு, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான மொத்தமுள்ள 349 வழக்குகளில் 248 வழக்குகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம் என்றும், இதில் 101 வழக்குகள் பொதுச் சொத்துக்கு சேதம் மற்றும் கடல் வழிப் போராட்டம் தொடர்புடையவை என்றும் கூறியுள்ளது.

மேலும், 2013ஆம் ஆண்டு நவம்பரில் வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் மீதான வழக்குகளை திரும்ப பெற முடியாது என்றும், இந்த வழக்குகளை திரும்ப பெற்றால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.