பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2014

மீட்பு பணிக்கு சவாலகியுள்ள இயற்கை; மேலும் 13 பயணிகள் சாவு 
தென்கொரியா கடற்பரப்பில் மூழ்கிய கப்பலிலிருந்து மேலும் 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து இதுவரையில் 46 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 
476 பேருடன் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 174 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும் மேலும் 256 பேரின் நிலைமை தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
 
சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பினால் மீட்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டிருந்த போதிலும் நூற்றுக்கணக்கான சுழியோடிகள்  மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்நிலையில் கப்பலின் மீட்பு பணிகள் நிறைவடைய இரண்டு மாதகாலங்கள்  எடுக்காம் என தென் கொரியா  தெரிவித்துள்ளது 
 
இறந்தவர்களை  அடையாளங்காண்பதற்காக பயணிகளின் உறவினர்கள் தமது டி என் ஏ மாதிரிகளையும் வழங்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.