பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2014

அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ 133 இலட்சம் வருமானம்

இரு தினங்களில் 64,000 வாகனங்கள் பயணம்
தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ் சாலைகள் மூலம்
பண்டிகைத் தினங்களில் 133 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக நெடுஞ்சாலை அமைச்சு தெரிவித்தது.
கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு - கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 64 ஆயிரங்கள் பயணித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவப் பிரிவு தெரிவித்தது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை யினூடாக இரு தினங்களிலும் 42 ஆயிரம் வாகனங்கள் பயணம் செய்ததோடு இதனூடாக 90 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்தது.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 22 ஆயிரம் வாகனங்கள் பயணம் செய்த அதே வேளை இதன் மூலம், 43 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. பண்டிகையை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாகப் பயணம் செய்யும் வாகனங்களிடம் அறவிடப்படும் கட்டணங்கள் குறைக் கப்பட்டன.