பக்கங்கள்

பக்கங்கள்

4 ஏப்., 2014



16 அமைப்புகள், 424 நபர்களைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு 
அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்
வெளிநாடுகளில் செயற்படும், 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 நபர்களைத் தடைசெய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அரசாங்கத்தினால்
வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 21ம் நாளிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி, விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் பட்டியலிடப்பட்டுள்ளன.

அத்துடன், இவற்றுடன் தொடர்புடைய, 424 நபர்களும் தடைவிதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களை இந்த அறிவிப்பு  ஒன்றும் பாதிப்பை கொடுக்காது

தடைவிதிக்கப்பட்டவர்கள் கனடா சுவிஸ் ஜெர்மனி ஸ்வீடன் பின்லாந்து பிரிட்டன் இத்தாலி அவுஸ்திரேலியா அமேரிக்கா பெல்ஜியம் பிரான்ஸ் ,டென்மார்க் நோர்வே இந்தியா மற்றும் சிறிலங்காவிலும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைவிதிக்கப்பட்டவர்களினது தற்போதைய முகவரி, சிறிலங்கா முகவரி உள்ளிட்ட விபரங்களுடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இணைப்பின் ஊடாக சிறிலங்கா அரசின் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை பார்வையிடலாம் :-
 http://documents.gov.lk/Extgzt/2014/PDF/Mar/1854_41/1854_41%20%28T%29.pdf#sthash.ClOzAbBi.dpuf