பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2014

புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை தொடர்பில் வெளிநாடுகளுக்கு விளக்கம்
வெளிநாடுகளில் செயல்பட்டு வந்த 16 புலம்பெயர் தமிழ் குழுக்கள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.
இதற்காக வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து, இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கான மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதற்கு தலைமை தாங்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போதுää 16 தமிழ் அமைப்புக்களை அரசாங்கம் தடைசெய்ததற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.