பக்கங்கள்

பக்கங்கள்

21 ஏப்., 2014

அதிமுக அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன-ஜெயலலிதா 
 காங்கிரஸ் ஆட்சி தான் சுதந்திர இந்தியாவின் மிக மோசமான ஆட்சி என்று முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று முதல் 3 தினங்களுக்கு
செனனையில் பிரசாரம் செய்ய உள்ளார்.

அதன்படி இன்று பிற்பகலில் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

23 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 203 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அண்ணாநகர் பிரசாரத்தில்...
மத்திய சென்னை வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை அண்ணாநகரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் தேர்தல். மக்களின் தலைவிதியை மாற்றி அமைக்கும் தேர்தல். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் தேர்தல்.

காங்கிரஸ் ஆட்சிதான் சுதந்திர இந்தியாவிலேயே நடைபெற்ற மிக மோசமான ஆட்சி. அனைத்து துறைகளிலும் ஊழல் மிகுந்த காங்கிரஸ் கூட்டணி அரசை மாற்றி, அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியில் அமைந்தால், தமிழை ஆட்சி மொழியாக்க முடியும்" என்று அவர் உறுதியளித்தார்