பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2014


படகு மூழ்கியது: 22 பேரை காணவில்லை
இந்தோனேஷியாவில் உள்ள  பாபுவா மாகாணத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பாபுவா மாகாணத்தில் மரப்படகு ஒன்றில் 30 பேர் பயணம் செய்தனர். அப்போது படகு மீது ராட்சத
அலை மோதியதில் படகு மூழ்கியது.

இதில் பயணம் செய்த அனைவரும் மூழ்கினர். பின்னர் தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் இதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 22 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது