பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2014

குருநகர் ஜெரோமி கொலை செய்யப்பட்டாரா ;சந்தேகிக்கும் பொலிஸார் 
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட  ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22)  கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என தாம்  
சந்தேகிப்பதாக யாழ். மாவட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்-
 
குறித்த யுவதியின் சாவு தொடர்பாக அவரது பெற்றோர் தெரிவித்த வாக்கு மூலத்தில் ஜெரோமியின்  சாவுக்கு இரு கிறிஸ்தவ பாதிரியார்கள் தான் தூண்டுதலாக இருந்திருக்கலாம்  என்றும் தெரிவித்திருந்தனர்.
 
இது தொடர்பாக குறித்த இரு பாதிரியாரிடமும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர்களிடம் இருந்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 
 
இதேவேளை முன்பு வழங்கியிருந்த வைத்திய அறிக்கையில் சந்தேகம்எழுந்துள்ளதால் எதிர்வரும் 23 திகதி சட்ட வைத்திய அதிகாரியினால் வழங்கப்படும் உடற்கூற்றுபரிசோதனை அறிக்கை கிடைத்த பின்புதான் இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும்,  வாக்கு மூலங்களை வைத்து யாரையும் கைது செய்ய முடியாது என்றும் இன்று யாழ் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்