பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2014

இலங்கை அகதிகள் முகாம்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் தணிக்கையில் ஈடுபட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் லேணாவிளக்கு அழியாநிலை தோப்புக்கொல்லை ஆகிய மூன்று இலங்கை அகதிகள் முகாம்கள் கடந்த 24 ஆண்டுகளாளக இருந்து வருகிறது.
இந்த முகாம்களில் மொத்தம் 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று புதுக்கோட்டையில் உள்ள ஓரு தனியார் பள்ளி கூடுதல் பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைக்க வருகைதரும் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அவரின் வருகைக்காக இலங்கை அகதிகள் முகாம் மக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் தணிக்கை செய்தனர்.

ஞாயிறு பொதுவிடுமுறை, திங்கள் உள்ளுர் விடுமுறை, செவ்வாய்கிழமை தணிக்கை மூன்று நாட்களாக வேலைக்கு போக முடியவில்லை. இதனால் முகாம் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு தனியார் பள்ளிக்கு அவர் வருகை தருகிறார். அதற்கு தணிக்கையா என்று மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.