பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 240 கோடி பறிமுதல் 
மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 240 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


அதிகபட்சமாக ஆந்திரப்பிரதேசத்தில் ரூபாய் 118 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் செவ்வாய்க்கிழமை வரை ரூபாய் 23.53 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் 1.32 கோடி லிட்டர் மதுபானமும், 104 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.