பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2014


தடைசெய்யப்பட்ட அமைப்பிடம் 25 பில்லியன் ரூபா சொத்துகள் – உயர்கல்வி அமைச்சர்
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களிடமுள்ள மொத்த சொத்து பெறுமதி 25 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கம் அண்மையில் 16 வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களை தடை செய்திருந்தது. 
 
இவற்றுக்கு பணம், கட்டடங்கள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என பல்வேறு வழிகளில் சொத்துக்கள் காணப்படுகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்களின் சொத்துக்களை நிறுவனத்தின் உறுப்பினர்களது குடும்ப உறுப்பினர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
  
போர் இடம்பெற்ற காலத்தில் மக்களுக்கு உதவிகளை வழங்கும் போர்வையில் பணம் திரட்டிய அரச சார்பற்ற நிறுவனங்கள் சொத்துக்களை பெருக்கிக் கொண்டுள்ளன. புலிகள் அமைப்பை மீள இயங்கச் செய்ய இந்த அமைப்புக்கள் முயற்சிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.