பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2014

மோடி வெற்றி பெற்றால் காவிரி பிரச்சினை தீரும்: வைகோ பிரசாரம்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பச்சமுத்துவை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே பிரச்சாரம் செய்து
வைகோ பேசியதாவது:-
தமிழகத்தை தவிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மட்டும் 272 இடங்களை விட அதிகமாக வெற்றி பெற்று மோடி பிரதமராவது உறுதி. மோடி வெற்றி பெற்றால் மட்டும் போதாது தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் தான் கேரளத்தின் முல்லை பெரியாறு பிரச்சனை கர்நாடாகவின் காவிரி நதிநீர் பிரச்சனை ஆந்திராவின் பாலாறு பிரச்சனை தமிழக மீனவர்கள் பிரச்சனை இலங்கை தமிழர்கள் பிரச்சனைகளை சரி செய்ய முடியும். 
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையால் வீடுகளில் லைட் எரியவில்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழல் தலை விரித்தாடுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ஊழல் அப்படியேதான் உள்ளது. திமுக தலைமை ஊழல்மிக்க தலைமை அதிமுக தலைமை ஊழல் மலிந்த தலைமை அவ்வளவுதான். ஊழல் மற்றும் மதுவில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும். இலங்கையில் தமிழகர்களை கொல்ல இந்திய அரசு ஆயுதங்கள் கொடுத்து உதவியது. அவர்களுக்கு ஆதரவாக ஐநா சபையில் செயல்பட்டது.
ஜெயலலிதா பிரதமராவார் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள். எந்த நாட்டுக்கு அவர் பிரதமராவார் என்று தெரியவில்லை. ஏதாவது தீவு விலைக்கு வாங்கி அதில் பிரதமாரானால் தான் உண்டு அல்லது நாடாளுமன்றம் போல சினிமா செட் போட்டு அதில் தான் பிரதமர் போல செயல்பட்டு கொள்ள முடியும். ஜெயலலிதா கூட்டணி கட்சியினரை மதிக்க தெரியாதவர். 
இந்தியாவில் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பல ஆயிரம் கோடி பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரவும் காங்கிரஸ் அரசு சிங்கள அரசுக்கு உதவிய துரோகத்தை செய்யாமல் வாஜ்பாய் அறிவித்த பிரகடணத்தை பின்பற்றி செயல்படுத்தவும் பெண்களுக்கும் சிறுபான்மை யினருக்கும் அதிக இடஒதுக்கிடு பெறவும் தாமரை சின்னத்தில் ஐஜேகே வேட்பாளர் பச்சமுத்துவிற்கு ஓட்டு போட்டு தமிழகத்திலேயே அதிக ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார்.