பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2014

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான  வருமான வரி வழக்கின் விசாரணையை மேலும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
இது தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில், தேர்தல் வருவதால் தம் மீதான வருமானவரி வழக்கை 4 மாதங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.



இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் முடியும் வரை 3 மாதங்களுக்கு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் தேர்தல் முடிந்த பின் ஜெயலலிதா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இவ்வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் வருகிற 28 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.