பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2014

41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா: காலிஸ் அதிரடி














மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் தொடரின் 7வது சீசனின் முதல் போட்டியில் மும்பை– கொல்கத்தா அணிகள் இன்று அபுதாபியில் மோதின.
நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் எடுத்தது.
ஜாக்யூஸ் காலிஸ் அரைசதம் கடந்து 72 ஓட்டங்களும், மனிஷ் பாண்டே 64 ஓட்டங்களும் எடுத்தனர். மும்பை சார்பில் லசித் மலிங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 164 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
ஆதித்யா தாரே 24 ஓட்டங்களும், அம்பதி ராயுடு 48 ஓட்டங்களும், ரோகித் சர்மா 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 4 விக்கெட் வீழ்த்தினார்.