பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014

மகிந்தாவின் 4 கிளியும் கண்டுபிடிப்பு 
 ஜனாதிபதி மாளிகையிலிருந்து பறந்துசென்ற நான்கு மெக்கோ கிளிகளில் நான்காவது கிளியும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

கொட்டாஞ்சேனையிலுள்ள வீடொன்றிலிருந்தே இந்த கிளி இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 
காணாமல் போன நான்கு கிளிகளில் மூன்று கிளிகள் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டதுடன் மற்றைய கிளியும் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த கிளியை கொட்டாஞ்சேனை பொலிஸார் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்துள்ளனர். இந்த கிளிகள் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.