பக்கங்கள்

பக்கங்கள்

28 ஏப்., 2014


ஐபிஎல் 7: ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி

சார்ஜாவில் இன்று நடைபெற்ற ஐபிஎல் சீஸன் 7 தொடரில் 17வது லீக் போட்டியில் சென்னை அணிக்கு வெற்றி இலக்காக சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 146 
ரன்னை எடுத்தது சென்னை அணி.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பின்ச் 44 ரன் எடுத்தார். ராகுல் 25 வேணுகோபால் ராவ் 13, சமி 23, சர்மா 17 ரன்கள் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் அஸ்வின் சிக்கனமாக 4 ஓவரில் 17 ரன் மட்டுமே கொடுத்தார். ஹில்பனாஹஸ், மோஹித் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஸ்மித் ஒரு விக்கெட் எடுத்தார்.
இதை அடுத்து 146 ரன்னை வெற்றி இலக்காகக் கொண்டு சென்னை அணி களம் இறங்கியது.
பின்னர் ஆடத் தொடங்கிய சென்னை அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நி்லையான துவக்கத்தை அளித்தனர். ஸ்மித் 46 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 66 ரன் குவித்தார். மெக்குலம் 33 பந்துகளில் 40 ரன் எடுத்தார் இதில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும். ரெய்னா 14 ரன்னும் பிளெஸிஸ்ன் ரன் ஏதும் எடுக்காமலும், ஜடேஜா 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். தோனி 13 ரன்னும்  மன்ஹாஸ் 3 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கான இலக்கை எட்டினர். சென்னை அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து, 146 ரன் எடுத்து தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்தது.