பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2014


சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 
சேலம் சங்ககிரியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான கார் மீது
பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் டயர் வெடித்ததால் மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அதில் இருவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.