பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2014

யாழ் மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு பனை சார் உற்பத்தி பொருட்கள் இன்று கையளிப்பு
பனை அபிவிருத்தி சபையினால் இன்று யாழில் கித்துள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதனடிப்படையில் திவிநெகும வாழ்வெழுச்சி திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் உள்ள 90பயனாளிகளுக்கு தலா 10000 ரூபா பெறுமதியான பனைசார் பொருட்களின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் இன்று கையளிக்கப்பட்டன.
 
இந்நிகழ்ச்சி திட்டம் இன்று பி.ப 2மணியளவில் யாழ் மாவட்ட செயலக்தில் இடம்பெற்றது.
 
மேலும் இந்த திட்டத்தினை பனை அபிவிருத்தி சபையும் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சும் இணைந்தே இந்த உபரகணங்களை வழங்கியது.
 
மேலும் இந்நிகழ்வுக்கு பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
மேற்படி நாளை மறுதினம் முல்லைதீவு,வவுனியாமன்னார்,ஆகிய மாவட்டங்களிலும் பனைசார் உற்பத்தி மேற்கொள்வதற்கான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.