பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2014

பிறக்கின்ற புதுவருடத்தில் உலக சமாதானம் வேண்டி ஆன்மீகப் பேரணி 
 பிறக்கின்ற புதுவருடத்தில் உலக சமாதானமும், சீரான பருவ மழையையும்  வேண்டி ஆன்மீகப் பேரணியொன்று இன்று காலை 9.30 மணியளவில்  யாழ்.சத்திரச் சந்தி ஞானவைரவர் ஆலயத்தில்
இருந்து பூஜை வழிபாடுடன் ஆரம்பமானது.
 
இலங்கை சைவ மகா சபையும், அகில இலங்கை திருமுறை மன்றமும் இணைந்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்
 
இப் பேரணியானது யாழ்.வைத்தியசாலை வீதி, மற்றும் கஸ்தூரியார் வீதியூடாக சென்று வண்ணை வீரகாளி அம்மன் கோயிலை வந்தடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.