பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2014

தென்னாபிரிக்காவில் கூட்டமைப்பினர் சிறில் ரமபோசாவுடன் முக்கிய பேச்சு?-அரச ஊடகம் 

எதிர்வரும் 9 ஆம் திகதி புதன்கிழமை தென்னாபிரிக்காவுக்குச் செல்லும் இரா. சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அங்கு இலங்கை
சமரச முயற்சியைக் கையாளுவதற்காக அந்நாட்டு ஜனாதிபதி ஜேக்கப் சுமாவினால் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் சிறில் ரமபோசாவை சந்தித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டமேலா சிறில் ரமபோசா (வய 62) தென்னாபிரிக்காவின் வர்த்தகர், சிறந்த அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர், பேச்சுக்கள் மற்றும் கூட்டு முயற்சிகளில் விற்பன்னர், கைதேர்ந்த தந்திரசாலி என்று மதிக்கப்படுபவர். தற்சமயம் தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் உபதலை வராகப் பதவி வகித்து வருகின்றார். தென்னாபிரிக்க தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் இவரே அந்நாட்டின் அடுத்த ஜனாதிப தியாவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளவர் என்றும் கருதப்படுகின்றார்.தென்னாபிரிக்காவில் இன முரண்பாடு இறுதிக்கட்டத்தை அடைந்தபோது, அதிகாரத்தில் இருந்த வெள்ளையரின் சிறுபான்மையினர் அரசுடன் பேச்சு நடத்துவதற்காக அப்போதைய தென்னாபிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டோவினால் விசேட பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பேச்சு மூலம் அந்தப் பிணக்குக்கு அமைதித் தீர்வு எட்டுவதிலும் அந்த நாட்டின் முதலாவது ஜனநாயகத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக மதிக்கப்படுகின்றது. அவரது இத்தகைய அனுபவம் காரணமாகவே இலங்கையில் பிணக்குடன் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளுக்கும் இடையி¡ன சமரச முயற்சிகளில் உரிய அனுசரணைப் பணி வகிப்பதற்காக அவரை தென்னாபிரிக்க ஜனாதிபதி தமது விசேட பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து நியமித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.