பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2014


கார் பந்தய வீரர் சூமாக்கேரை சுவிசில் வைத்து சிகிச்சை அளிக்க திட்டம் 

கார் பந்தய போட்டியில் கொடிகட்டி பறந்த மைக்கேல் ஷூமேக்கர் சிகிச்சைக்காக தற்போது சுவிஸ் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
உலகில் அதிக பார்முலா1 போட்டிகளில் வெற்றி பெற்ற பெருமை ஜேர்மனியின் மைக்கேல் ஷுமேக்கரையே (44) சாரும்.
கடந்த 2012ம் ஆண்டுடன் கார் பந்தயத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற இவர் கடந்த நவம்பர் 29ம் திகதி பிரான்ஸ் ஆல்பஸ் மலையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாரதவிதமாக தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் கோமாவில் இருப்பதால் கடந்த 4 மாதகாலமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவரை கோமாவிலிருந்து எழுப்ப முயன்றாலும் அவர் குணமடைவது கேள்விக்குறியாய் உள்ளது.
இந்நிலையில் அவரை சுவிஸ் வோ மாநிலத்தில்  ரிசார்ட் ஒன்றை மருத்துவ அறையாக மாற்றி சிகிச்சையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு மொத்தம் 12 மில்லியன் பிராங்குகள் செலவாகும் என கூறப்படுகிறது.
மேலும் அவர் சுவிஸ் செல்வதற்கான ஏற்பாடுகளை அவரது மனைவி செய்து வருகிறார்.