பக்கங்கள்

பக்கங்கள்

11 ஏப்., 2014

நான் இப்போது  ராசியானவன்: வைகோ பேச்சு
தென்காசி (தனி) தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வைகோ வெள்ளிக்கிழமை காலை சங்கரன்கோவிலில் பேசும்போது, 


எங்கள் வேட்பாளர் சதன்திருமலைக்குமார் ஏற்கனவே தொகுதிக்கு அறிமுகமானவர். உங்கள் சொந்த தொகுதியைச் சேர்ந்தவர். நான் வெற்றி பெறுவதைவிட வேட்பாளர் வெற்றிபெறுவதையே சிறந்ததாக கருதுகிறேன். ஈழப் பிரச்சனைக்கு முழுக் காரணமே காங்கிரஸ் கட்சி. நரேந்திரமோடி பிரமராக வந்தால் நன்மையில்லாவிட்டாலும், ஒரு சதவீதம் கூட தீமை வராது. சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும். என்னை எல்லோரும் ராசியில்லாதவர் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது நான் ராசியானவன் என்றார்.