பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2014


தென்னாபிரிக்க ஜானதிபதி பிரதிநிதி ரம்போசாவை சந்தித்த பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு 
 இலங்கை விவகாரங்களை கையாளும் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ரம்போசாவைத் ஜோகன்ஸ்பேர்க்கில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட
குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தலைமையில் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சுரேஷ்பிரேமச்சந்திரன்  செல்வம்அடைக்கநாதன்  ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவே இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. 
இதேவேளை தென்னாபிரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ரம்போசா விரைவில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ வியாயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் அதன் போதும் மீண்டும் பேச்சுக்களில் ஈடுபட தீர்மாத்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது.
    
இதேவேளை இக்குழுவினர் தென்னாபிரிக்காவின்  சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் மெயிட்டி நெக்கோனா அம்மையாருடனும் விரிவான பேச்சுக்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.