பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2014


வெலிக்கடை சிறைக்குள் வீசப்பட்ட பொதி குறித்து விசாரணை
கொழும்பு வெலிக்கடை சிறை மகளிர் பிரிவிற்குள் வீசப்பட்டுக் கிடந்த பொதி குறித்து சிறைச்சாலை நிர்வாகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து வீசப்பட்ட பொதி ஒன்றை சோதனை செய்த போதே அதில் இருந்து ஹெரோயின் மீட்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அப்பொதியினுள் சவர்க்கார கட்டிகளில் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 ஹெரோயின் பைக்கற்றுக்கள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 5 சிம் கார்ட்கள் என்பன இருந்துள்ளன.
இதற்கு முன்னரும் இவ்வாறு சிறைக்குள் பொதிகள் வீசப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.