பக்கங்கள்

பக்கங்கள்

10 ஏப்., 2014


இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாக
காணப்படுவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

எனவே, இலங்கைக்கு பயணம் செய்யும் பிரஜைகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.ஏனையவர்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையில் அவுஸ்திரேலிய பிரஜைகள் சிக்கிவிடக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் இடம்பெறும் பாரியளவிலான ஆர்பாட்டங்கள் போராட்டங்களில் அவுஸ்திரேலியர்கள் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலகங்களை அடக்குவதற்கு கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாகவும், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளனர்.