பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2014

யாழ். தொல்புரம் வடக்கம்பரை அம்பாள் விளையாட்டுக் கழகத்தின் சுற்றுப் போட்டியில் மெய்கண்டானை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய விக்ரோரியன்
 யாழ். தொல்புரம் வடக்கம்பரை அம்பாள் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தொல்புரம் வேல்ட் விஷன் அனுசரணையில் சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட
கழகங்களிற்கு இடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
 
 
 
பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கலந்து சிறப்பித்தார்.
 
சுழிபுரம் விக்ரோரியன் விளையாட்டு கழகத்திற்கும், பண்ணாகம் மெய்கண்டான் விளையாட்டு கழகத்திற்கும் இடையில் நேற்று இரவு 6.30  மணியளவில் ஆரம்பமான முதலாவது போட்டியை பிரதம விருந்தினர் கைலாகு கொடுத்து ஆரம்பித்து வைத்தார். 
 
தொடர்ச்சியாக நடைபெறும் இப் போட்டிகளின் இறுதிப்போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி இடம் பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.