பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2014

இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானதுஆவணப்படத்தின்முன்னோட்டம் வெளியீடு
இந்திய பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது" என்ற ஆவணப்பட முன்னோட்டம் தமிழகத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.
 
கடந்த ஜனவரி 31 அன்று  இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நில அபகரிப்பு மாநாட்டில் இப்படம் முதல் முறையாக திரையிடப்பட்டது. 
 
அதன் பின் லண்டன் யூனிவெர்சிட்டி கல்லூரியிலும், மனித உரிமைக் கூட்டத் தொடரின்பொழுது ஐ.நா.சபையிலும் திரையிடப்பட்டது.
 
இந்த ஆவணப் படத்தில், நில அபகரிப்பு  பற்றி மட்டுமல்லாமல், 2009 போரில் இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றியும் இலங்கை ராணுவச் சிப்பாய் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் ரசாயன ஆயுதங்கள் பயன்பாடுகள் தொடர்பாகவும் கூறியுள்ளார்.
 
ராணுவச் சிப்பாயின் இப்பேட்டி தொடர்பாக பேசியுள்ள இலங்கை இராணுவ பேச்சாளர்இ 'யாரோ ஒருவர் இலங்கை ராணுவ உடையில் பேசியுள்ளார். இதை நாங்கள் ஏற்கமாட்டோம். போரில் நாங்கள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை" எனக் கூறியுள்ளார்.
 
ஆனால் இந்த பேட்டி, நந்தி கடலில் இப்போதுள்ள போர் அருங்காட்சியகத்தில்  தமிழ்ப் பிரபாகரன் கடைசியாக கைது செய்யப்பட்ட இலங்கைப் பயணத்தின்போது எடுக்கப்பட்டதாக படத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரசாயன ஆயுதங்கள் பயன்பாடு தொடர்பாக காணாமல் போன சிங்கள பத்திரிகையாளர் பிரகீத் எக்னோல்டாவின் மனைவி சந்தியாவும் இதில் பேசியுள்ளார். இவை மட்டுமின்றி நில அபகரிப்புகள் பற்றியும், தமிழ்ப் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் விசாரிக்கப்பட்டதை பற்றியும் பல ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.