பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2014

தாக்குதலுக்கு இலக்கான தேரர் காலமானார் 
கூரிய ஆயுதத்தினால் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த எல்பிட்டிய சரணங்கர விஹாரையின் விஹாராதிபதி வெத்தேவே பஞ்சகீர்த்தி தேரர் சிகிச்சை பயனின்றி இன்று காலமாகியுள்ளார்.
 
தேரர் மீது கடந்த மாதம் 15ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேரர் பின்னதாக கராப்பிட்டய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு ஒரு மாதத்திற்கும் அதிக காலம் சிகிச்சை பெற்று வந்த தேரர் காலமாகியுள்ளார்.