பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014

மோடி திருமணத்தின் போது வயதுக்கு வந்துவிட்டார்: அடித்து சொல்கிறார் நக்மா

பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தனது திருமணத்தின் போது மேஜராகவே இருந்துள்ளார் என்று நடிகை நக்மா கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளரான நடிகை நக்மா, இந்தூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ''மோடி தனது திருமணத்தின் போது மைனராக இருந்தார் என்று சொல்லப்பட்டு வருவது முற்றிலும் பொய்யானது.
அவர் அப்போது மைனராக இல்லை, கருத்தறிந்த பின்னரே மோடி திருமணம் செய்து கொண்டார் என்பதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளன.
இதற்கு முந்தைய தேர்தல்களின் வேட்பு மனுக்களில் மோடி தனது திருமணம் குறித்த தகவலை மறைத்து வந்த நிலையில், தற்போதைய தேர்தலில் மனைவியின் பெயரை வெளியிட்டுள்ள மோடியின் திருமண விவகாரம் பற்றி கேள்வி எழுப்புவதில் தவறு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.