பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2014

சென்.சேவியர், சென். ஜேம்ஸ் மன்னார் கபடியில் சம்பியன்
முசலி பிரதேச செயலர்பிரிவுக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான ஆண், பெண் இருபாலாருக்குமான கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சவேரியார்புரம்
சென். சேவியர் விளையாட்டுக் கழகமும் பெண்கள் பிரிவில் கொக்குப் படையான் சென்.ஜேம்ஸ் விளையாட்டுக்கழக அணியும் வெற்றி பெற்றுச் சம்பியன் ஆகின.
 
சவேரியார்புரம் விளையாட்டுக்கழக மைதானத்தில் முதலில் இடம்பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் சவேரியார் சென்.சேவியர் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கெக்குபடையான் சென். ஜேம்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதிக்கொண்டது.
 
இதில் சவேரியார்புரம் சென். சேவியர் விளையாட்டுக்கழக அணி 38:23 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனானது. பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கொக்குப்படையான் சென்.ஜேம்ஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து சவேரியார்புரம் சென்.சேவியர் விளையாட்டுக் கழகஅணி மோதிக் கொண்டது. 
 
இதில் கொக்குப்படையான் சென்.ஜேம்ஸ் விளையாட்டுக் கழக அணி 34:30 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றுச் சம்பியனானது.