பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2014



முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்பாரிய  வெடிப்புச் சம்பவம் .
முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேசத்தில் குறித்த பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராணுவ ஆயுதக் களஞ்சியத்தில் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது.
முல்லைத்தீவு மாவட்டம், உடையார்கட்டு, குரவயல் பக்கமாக காடுகளை அண்மித்துள்ள பகுதியில் நேற்று மாலை 6.42 மணியளவில் பாரிய வெடிப்புச் சத்தம் ஒன்றை கேட்டதாக பிரேதசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் கறுப்பு நிற புகைப்படலங்கள் மேலெழுந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.
மக்கள் நடமாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெடிப்புச் சத்தத்தின் அதிர்வுகள் பல நூறு மீற்றர்கள் வரை எதிரொலித்துள்ளன.
சம்பவத்தை அடுத்து இராணுவ அம்புலன்ஸ் வண்டிகள் பெரும் சத்தத்துடன் ஓடித் திரிந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்தை அடுத்து பிரதேசத்தில் மக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை காணக் கூடியதாக இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.