பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2014


இராணுவ இணையத்தளங்களை ஹெக் செய்யும் முயற்சி தோல்வி?- சிங்களப் பத்திரிகை
இராணுவ இணையத்தளங்களை ஹெக் செய்ய புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் மற்றும் முப்படையினரின் இணையத்தளங்கள் உள்ளிட்ட இருபது முக்கிய இணையத்தளங்களை ஹெக் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட முன் எச்சரிக்கை காரணமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபி உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் குழப்பமடைந்துள்ளதாக அப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதனை அறிந்து கொள்ள பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய இணைய தளங்களை ஹெக் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளங்களை ஹெக் செய்து அதன் தரவுகளை ஊடறுப்பதே புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் முயற்சியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளங்களை ஹெக் செய்வதற்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை பணம் கொடுத்து பணிக்கு அமர்த்தியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
கோபி பற்றிய தகவல்கள் உள்ளிருந்தே சென்றிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுவதனால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.