பக்கங்கள்

பக்கங்கள்

21 ஏப்., 2014


வைகோ வழியில் வாரிசு

நடைப் பயணத்துக்கு அசராதவர் வைகோ. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தமிழகம் முழுவதும் அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். இப்போது விருதுநகர்
தொகுதியில் போட்டியிடும் வைகோ, செல்லாத ஊரே இல்லை. வைகோ வழி எப்போதும் தனி வழி. அதை யார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, அவர் மகன் துரை வையாபுரி பின்பற்றத் தொடங்கியுள்ளார்.
வைகோவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், ஒரே நாளில் 150 கிலோ மீட்டருக்கு இரு சக்கர வாகனத்திலேயே பிரசாரம் செய்துள்ளார். மொத்தம் 28 கிராமங்களைக் கடந்து அவர் பயணித்துள்ளார். காலை 9 மணிக்குத் தொடங்கி, இரவு 7 மணி வரை இடைவிடாமல் அவர் பிரசாரம் செய்து வருகிறார். வைகோ வழியில் துரை வையாபுரி என்று மதிமுகவினர் புது புகழ் பாடத் தொடங்கியுள்ளனர்.