பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2014

இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரம் பகிரப்பட வேண்டும்; ஆவன செய்வோம் என்கிறது பா.ஜ.க. 
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அங்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு பாரதிய ஜனதாக் கட்சி முழுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ள அந்தக் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், இலங்கையில்
அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு, இலங்கை அர சுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலேயே பேச்சு நடை பெற வேண்டியது முக்கியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
தஞ்சாவூரில் இடம்பெற்ற மக் கள் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தி னார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்ததா? தி.மு.க. என்ன செய்தது? அ.தி.மு.க. என்ன செய்தது? இலங்கையின் அரசியல் சட்டத்தில் 13 ஆவது திருத்தத்தை மேற்கொண்டார்கள். 
 
ஆனால் இன்று வரையிலும் அதைச் செயற் படுத்தவில்லை. ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு வெளி யுறவுக் கொள்கையில் தோல்வி அடைந்து விட்டது. அவர்கள் உரிய அழுத்தத்தைக் கொடுத்து இருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்து 
இருக்கும். ஆனால் அவர்கள் செய்யவில்லை.
 
நான் உறுதி அளிக்கின்றேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பு ஏற்பார். நாங்கள் உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்.
 
அங்கு தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் d என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.