பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014


வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும்: ராஜ்நாத் சிங்
தஞ்சாவூர் திலகர் திடலில் பாஜக பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,


இலங்கை தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல் நடவடிக்கையாக இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும். காங்கிரஸ் அரசு ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. இதை பாஜக சொல்லவில்லை. இதனை மத்திய கணக்கு தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது என்றார்.