பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2014


அமைச்சர் றிசாட்டின் காரியாலயம் பொது பல சேனாவால் முற்றுகை
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்  றிசாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள அலுவலகம், பொது பல சேனா அமைப்பினரால்  முற்றுகையிடப்பட்டுள்ளது.
ஜன பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர், குறித்த அலுவலகத்தில் மறைந்திருப்பதாகக் கூறியே பொது பல சேனா அமைப்பினர் குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், தான் தற்போது குறித்த அலுவலகத்தில் இல்லை எனவும் அமைச்சர்  றிசாட் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சின் அதிகாரிகளுக்கும், பொதுபல சேனா அமைப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.