பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2014


நரேந்திரமோடி வலிமையான தலைவர்; திறமையான நிர்வாகி: ரஜினி பேட்டி 
சென்னையில் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தல் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம்
நீடித்தது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ரஜினி, இந்த சந்திப்பில் அரசியல் கிடையாது. மோடி எனது நலம் விரும்பி. நான் மோடியின் நலம் விரும்பி. எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது ஆஸ்பத்திரியில் வந்து பார்த்தார். நான் சிங்கப்பூரில் இருந்தபோது அடிக்கடி நலம் விசாரித்துக்கொண்டிருந்தார். பின்னர் நான் சென்னை திரும்பியவுடன், எனது நலனில் அக்கறை கொண்ட அவரிடம், நீங்கள் சென்னை வரும்போது எனது வீட்டுக்கு வந்து டீ சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அதற்காக சென்னை வந்த அவர் என் வீட்டுக்கு வந்திருக்காங்க. ரொம்ப சந்தோஷம். எல்லாருக்குமே தெரியும் அவர் ஒரு வலிமைûயான தலைவர். திறமையான நிர்வாகி என்றார்.