பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2014

பகீரதனும் தேவைப்படுகிறார்; யாழில் சுவரொட்டி
தேவைப்படுகிறார் என்று தலைப்பிடப்பட்ட மேலும் ஒரு சுவரொட்டி யாழ்.குடாவின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.


அதன்படி நல்லூர் பகுதியில் அதிகளவில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதிகளவிலான குற்றங்களுடன் தொடர்புடைய தெய்வீகன் அல்லது பகீரதன் என்று அழைக்கப்படுபவர் தேவைப்படுகின்றார் என அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 5இலட்சம் ரூபா பெற்றுத் தருவதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தகவல்களை வழங்குவதற்கும் 2 தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வாறு தேவைப்படுகின்றனர் என தொடர்ந்தும் பலரின் பெயர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அண்மையில் கோபி மற்றும் அவரது சகாக்கள் தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு 10 இலட்சம் தருவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.