பக்கங்கள்

பக்கங்கள்

7 ஏப்., 2014


வைகோ அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்
அருப்புக்கோட்டை காந்திநகர், பாலையம்பட்டி, சிவன்கோவில், பாவடித் தோப்பு ஆகிய இடங்களில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமைச்சர்
கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்  பிரச்சாரம் செய்தார்.


அப்போது அவர்,  ‘’தற்போது இந்தியாவின் பொருளாதாரம் படு பாதாளத்திற்குச் சென்று விட்டது. இதற்கு காரணம் மத்திய அரசில் அங்கம் வகித்த நிதி அமைச்சர் சிதம்பரமே. கேரளாவில் மீனவர்களை இத்தாலி கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். உடனே கேரள அரசு இத்தாலி கடற் படையினரை சிறையில் அடைத்தது.
ஆனால் இலங்கையில் சிங்கள ராணுவம் 1 லட்சத்து 70 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்தது. அதற்க்கு மத்திய அரசு மற்றும் தி.மு.க.வினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிங்கள ராணுவத்தினர் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் ராணுவப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தடை போட்டார். சிங்கள விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் விளையாடவும் தடை விதித்தார்’’ என்று பேசினார்.

அவர் மேலும்,  ‘’பாராளுமன்றத்தில் 9 பிரதமர்களை தட்டிக்கேட்ட வைகோவை இன்று விஜயகாந்த் அறிமுகம் செய்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ம.தி.மு.கழகம் சவக்குழியை நோக்கி சென்று விட்டது. எனவே வைகோ அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும்’’ என்று பேசினார்.