பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2014

ஜெயலலிதா பயப்படுகிறார்! நேரடியாக விவாதிக்க தயாரா? சென்னையில் முரளிதர ராவ் பேட்டி!

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை பாஜக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் பொறுப்பாளருமான முரளிதர ராவ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 
தற்போது நடப்பது தேசிய அளவிலான தேர்தல் என்பதால் தான் மாநில அரசுகளை விமர்சிக்கவில்லை.
பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரி டெல்டா விவசாயிகளின் பிரச்சனை விரைந்து தீர்க்கப்படும். தமிழகத்தைக் காட்டிலும் குஜராத் மாநிலம் மின்சாரத்தில் தன்னிரைவு அடைந்துள்ளது.

குஜராத் வளர்ச்சி குறித்து ஜெயலலிதா நேரடியாக விவாதிக்க தயாரா. எந்தவொரு நேரடி விவாதத்திற்கும் பாஜக தயாராகவே உள்ளது. இரண்டாவது நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். பாஜகவை ஜெயலலிதா நேரடியாக விமர்சித்துள்ளார். இதிலிருந்தே தெரிகிறது பாஜகவை கண்டு அவர் பயப்படுகிறார். இவ்வாறு கூறினார்.