பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2014

பதில் கூறிக்கொண்டிருக்க நேரமில்லை செய்கை மூலமே பதிலடி கொடுப்போம் - இரா.சம்பந்தன் 
 "அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாம் நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று காட்டமாக தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

 
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கே வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­. இதுகுறித்து இரா.சம்பந்தனிடம் கருத்துக் கேட்டபோதே இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார்.
 
தென்னாபிரிக்க அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதையடுத்து அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ தேசிய பத்திரிகை ஆசிரியர்களை நேற்று முன்தினம் அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். அப்போது 
 
"இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக் குழுவிற்குத்தான் வரவேண்டும்'' என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். 
 
இதுகுறித்துக் கருத்துக் கேட்டபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். ""அவர்கள் தங்கள் அரசியலுக்காக ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் நடத்தையால் தக்க பதிலடி கொடுப்போம்'' என்று கூறினார் அவர்.
 
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவுமாறு இலங்கை அரசு, தென்னாபிரிக்க ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டது. அதற்கிணங்க, தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கம் ­மாவினால், இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட பிரதிநிதியாக சிறில் ரமபோஷா நியமிக்கப்பட்டதுடன், நல்லிணக்கம் தொடர்பான முயற்சிகளில் தென்னாபிரிக்க அரசு தீவிரவாக இறங்கியுள்ளது.