பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2014


ஜெயலலிதாவை புகழ்ந்த கிருஷ்ணசாமி திமுகவிற்கு வாக்கு கேட்டு வருகிறார்: ஜான்பாண்டியன்
சட்டப் பேரவையில் ஜெயலலிதாவை புகழ்ந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது கலைஞரை புகழ்ந்து வருகிறார். இதற்கு பணம் தான் காரணம் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.



தென்காசி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வசந்தி முருகேசனை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு பகுதிகள், கோட்டைப்பட்டி, ராமசாமியாபுரம், கோட்டையூர் உள்ளிட்டப் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு அப் புகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியபோது,  ‘’என்னைப் இப் பகுதிக்கு வந்து வாக்கு கேட்டு வரக்கூடாது என்று கூறினார்களாம். இதோ வந்து வாக்கு சேகரிக்கிறேன். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி,  ஜெயலலிதாவை சட்டப் பேரவையில் புகழந்து பேசியவர். தற்போது தனது சுயநலத்திற்காக கருணாநிதி புகழ்ந்து பேசுகிறார்.


இதற்கான காரணம் சிறு குழந்தைக்க்கு கூட புரியும். சமுதாய மக்களுக்காக நான் கட்சி ஆரம்பித்தேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து பாடுபட்டு வருகிறார். தமிழக மக்கள் தான் அவரது குடும்பம். சமுதாய மக்கள் விழிப்புடன் இருந்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்றார் அவர்.