பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2014

 ஏற்கனவே சாட்சியமளித்திருந்த டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஆகியோரை காணாமல் போனவர்களை தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைத்து விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு வடக்கிலும் கிழக்கிலும் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கில் இந்த ஆணைக்குழு இதுவரை நடத்திய விசாரணைகளில், அரசபடையினர் மீதும், இந்த மூவரது குழுக்களின் மீதுமே அதிகப்படியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
யுத்த காலத்தில் ஏராளமானோர் காணாமல் போன சம்பவங்களுடன் இந்த மூவரும் வழிநடத்திய ஆயுதக் குழுக்கள் நேடியாகத் தொடர்புபட்டிருப்பதாகப் பல மனித உரிமை அமைப்புக்களும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து தெரிவித்து வந்திருக்கின்றன.
இவர்கள் மூவரும், ஏற்கனவே, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையிலும் சாட்சியமளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.