பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2014

பேஸ் புக் சர்ச்சையில் சிக்கி பிணையில் விடுதலையாகி இருந்த குருணாகல் சேர் கொத்தலாவல மகா வித்தியாலயத்தின் அதிபர் மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 
பேஸ் புக் இணையத்தளத்தில் வேனுஷா இந்திவரி என்ற மாணவியின் புகைப்படம் ஒன்று வெளியான போது அது தொடர்பாக குறித்த மாணவியை தண்டித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் கைதான அதிபர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.
 
இந்நிலையில் அதிபர் சாட்சிகளுக்கு பயமுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்தே குருணாகல் நீதிவான் எதிர் வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.