பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2014

நாகப்பட்டினம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் 24.04.2014 அன்று தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களாக நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் வடிவேல் இராவணனும், சிதம்பரம் (தனி) தொகுதியில் கே.ஐ. மணிரத்தினமும் போட்டியிடுவார்கள்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.